

நீ எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம் ஜோ என்று நெகிழ்ச்சியுடன் சூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களின் முக்கியமானவர்கள் சூர்யா - ஜோதிகா. இந்த ஜோடி திரையிலும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருவருமே காதலித்து 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த ஜோடிக்கு திருமணமாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகிறது. ஜோதிகா தனக்கு எந்தளவுக்கு முக்கியமானவர் என்பதை பல்வேறு மேடைகளில் வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா.
இன்று திருமண நாளை முன்னிட்டு, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் சூர்யா கூறியிருப்பதாவது:
"நீ எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம் ஜோ. உங்கள் அனைவரது அன்புக்கும் மரியாதைக்கும் நன்றி"
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.
சூர்யா - ஜோதிகா தம்பதியினருக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இருவருடைய முதல் எழுத்தைக் கொண்டே 2டி என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார் சூர்யா.