ஹரி - அருண் விஜய் இணையும் யானை

ஹரி - அருண் விஜய் இணையும் யானை
Updated on
1 min read

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படத்துக்கு 'யானை' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ட்ரம்ஸ்டிக் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்குப் பெயரிடப்படாமலேயே படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தப் படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் போஸ்டரை 33 பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். ஏனென்றால் இது அருண் விஜய் நடிப்பில் வெளிவரும் 33-வது படமாகும்.

இந்தப் படத்துக்கு 'யானை' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதில் ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட், ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்ட பலர் அருண் விஜய்யுடன் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக கோபிநாத், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், எடிட்டராக ஆண்டனி, கலை இயக்குநராக சக்தி வெங்கட் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in