இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நடிகர் பாலா

இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நடிகர் பாலா
Updated on
1 min read

இயக்குநர் ‘சிறுத்தை’ சிவாவின் சகோதரரும், நடிகருமான பாலாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது.

தமிழில் 'அன்பு' (2003) படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் பாலா. இயக்குநர் ‘சிறுத்தை’ சிவாவின் சகோதரரான இவர் ‘காதல் கிசுகிசு’, ‘அம்மா அப்பா செல்லம்', ‘கலிங்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ‘புதிய முகம்’, ‘சாகர் அலையஸ் ஜாக்கி ரீலோடட்’, ‘என்னு நிண்டே மொய்தீன்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சிவா இயக்கிய ‘வீரம்’ படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்திலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பாலா. 2012ஆம் ஆண்டு ‘ஹிட் லிஸ்ட்’ என்ற மலையாளப் படத்தையும் பாலா இயக்கியிருந்தார்.

இந்நிலையில் பாலாவுக்கு மருத்துவரான எலிசெபத் உதயன் என்பவருடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானபோது பாலா அதுகுறித்து எதுவும் கூறாமல் மவுனம் காத்து வந்தார். நேற்று முன்தினம் (செப். 05) கேரள மாநிலம் திருச்சூரில் பாலா - எலிசெபத் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு பாடகியான அம்ருதா சுரேஷுடன் பாலாவுக்குத் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார். 2019ஆம் ஆண்டு விவாகரத்து ஆகி இருவரும் பிரிந்த நிலையில், தற்போது கேரளாவைச் சேர்ந்த மருத்துவரான எலிசெபத்தை பாலா திருமணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in