அக்டோபரில் படப்பிடிப்பு

துஷாரா
துஷாரா
Updated on
1 min read

இயக்குநர் பா.ரஞ்சித், ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் வரவேற்பை தொடர்ந்து, ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் காளிதாஸ், அசோக் செல்வன், துஷாரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை முடித்துவிட்டு, விக்ரம் நடிக்க உள்ள புதிய படத்தை ரஞ்சித் இயக்க உள்ளார். இதை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in