

'முத்துராமலிங்கம்' படத்துக்காக இளையராஜா இசையில் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் கமல்ஹாசன்.
கார்த்திக், கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'முத்துராமலிங்கம்'. ராஜதுரை இயக்கி வரும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். குளோபல் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்துக்காக இளையராஜா இசையில் "தெற்கு தெச சிங்கமடா, முத்துராமலிங்கமடா, சுத்த பசும்பொன் தங்கமடா" என்று தொடங்கும் பாடலை கமல்ஹாசன் பாடியுள்ளார். 21 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சு அருணாசலம் இளையராஜாவின் இசைக்கு பாடல் வரிகளை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்பாடல் மூலம் முத்துராமன், கார்த்திக், கவுதம் கார்த்திக் என மூன்று தலைமுறைகளுக்கு பாடல் எழுதியிருக்கிறார் பஞ்சு அருணாசலம்.
சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து ஆகியோரும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.