

தங்கராஜு இயக்கியுள்ள ‘கம்பெனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதில், ‘கோலி சோடா’ புகழ் பாண்டி, முருகேசன் ஆகியோருடன் தெரிஷ் குமார், பிரித்வி ஆகிய 2 இளைஞர்கள் புதுமுகங்களாக இணைந்துள்ளனர். கதாநாயகிகளாக ‘கன்னி மாடம்’படத்தில் நடித்த வளினா, ‘திரவுபதி’ படத்தில் கவனம் பெற்ற காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.
கரூரில் சொகுசு பேருந்துவடிவமைக்கும் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் 4 இளைஞர்கள், வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு உயர வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களது நியாயமான லட்சியத்துக்கு எப்படி, எந்த வடிவில் பிரச்சினை வருகிறது. அவர்கள் அதை கடந்து லட்சியத்தை அடைய முடிந்ததா என்பது கதை. பாடல்கள் இல்லாமல் விறுவிறுவென நகரும் இந்த ‘ரியல் லைஃப்’ த்ரில்லர் படத்துக்கு ஜுபின் பின்னணி இசை அமைத்து வருகிறார்.