Published : 26 Aug 2021 06:25 PM
Last Updated : 26 Aug 2021 06:25 PM

'அனபெல் சேதுபதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை

விஜய் சேதுபதி, டாப்ஸி நடித்துள்ள 'அனபெல் சேதுபதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

பிரபல இயக்குநரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'அனபெல் சேதுபதி'. இதில் விஜய் சேதுபதி, டாப்ஸி, யோகி பாபு, ராதிகா, மதுமிதா, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முழுக்க காமெடி ஹாரர் பாணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள பிரம்மாண்டமான அரண்மனையில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. முதலில் இந்தப் படத்துக்கு 'அனபெல் சுப்பிரமணியம்' எனத் தலைப்பிட்டு இருந்தனர். தற்போது தலைப்பை மாற்றியிருக்கிறார்கள்.

'அனபெல் சேதுபதி' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. செப்டம்பர் 17-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x