மகேஷ் நாராயணன் இயக்கத்தில் 'தேவர் மகன் 2'?

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் 'தேவர் மகன் 2'?
Updated on
1 min read

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் 'தேவர் மகன் 2' உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1992-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'தேவர் மகன்' படத்தின் 2-ம் பாகத்தில் நீண்ட வருடங்களாக பணிபுரிந்து வருகிறார் கமல்ஹாசன். இதற்கு 'தலைவர் இருக்கின்றான்' என்று தலைப்பிட்டுள்ளதாகவும் பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். 'தேவர் மகன்' படத்தின் கதை, திரைக்கதை அனைத்துமே கமலுடையதாக இருந்தாலும், அதனை இயக்கியிருந்தார் பரதன்.

தற்போது கமல் அளித்துள்ள பேட்டியொன்றில் மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரான மகேஷ் நாராயணனுக்காக கதை எழுதி வருவதாக தெரிவித்துள்ளார். இயக்குநர், கதாசிரியர், எடிட்டர் என பல துறைகளில் பணிபுரிந்து வருபவர் மகேஷ் நாராயணன். 'விஸ்வரூபம்' படத்துக்கு எடிட்டராக பணிபுரிந்தவர் மகேஷ் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.

'தேவர் மகன்' 2-,ம் பாகமான 'தலைவன் இருக்கின்றான்' கதையைத் தான் மகேஷ் நாராயணுக்காக கமல் எழுதி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

சமீபத்தில் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஃபகத் பாசில் நடித்த 'மாலிக்' படத்தை பார்த்துவிட்டு கமல் பாராட்டு தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in