

ஏ.சி.முகில் செல்லப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படத்தில் முதல்முறையாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் ஏற்று நடித்தார் பிரபுதேவா.
இப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், அடுத்து ‘குலேபகாவலி’ இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் தற்போது நடித்துவரும் புதிய படத்திலும் காவல் துறை அதிகாரியாக அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது.
‘திட்டம் 2’, ‘பூமிகா’ என, தொடர்ந்து நாயகியை மையமாகக் கொண்ட கதைகளை தேர்வு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்த 2 படங்களைத் தொடர்ந்து, 3-வதாக தற்போது ஒரு புதுமுக இயக்குநரிடம் பிரபுதேவா கதை கேட்டுள்ளார். அதுவும் காவல் துறை பின்னணி கதைக்களம் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் கதாபாத்திரங்கள் என்பதால், சமீபகாலமாக தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார் பிரபுதேவா.