

'தனி ஒருவன்' படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'மிருதன்'. லட்சுமி மேனன் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை சக்தி செளந்தர்ராஜன் இயக்கி இருக்கிறார். இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றி இருக்கும் ஐங்கரன் நிறுவனம் நாளை (பிப்ரவரி 19) வெளியிடுகிறது.
'மிருதன்' படம் வெளிவருவதை ஒட்டி ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் ஜெயம் ரவி. அப்பதில்களின் தொகுப்பு:
* அமிதாப் பச்சன் சாருடன் நடிப்பது தான் எனது நீண்ட நாள் கனவு
* 'மிருதன்' படத்தின் படக்குழுவினர் உழைப்புக்கு அதற்கேற்ற பலன் கிடைக்கும்
* 'அவனை ரசிச்சு ருசிச்சு அழிக்கப் போறேன்' என்ற வசனம் தான் 'தனி ஒருவன்' படத்தில் எனக்கு பிடித்த வசனம்
* தமிழ்த் திரையுலகில் பிரபுதேவா சார் தான் எனக்கு தெரிந்து நன்கு நடனம் ஆடக் கூடியவர்.
* எனது கடினமான உழைப்பும், நேர்மையும் தான் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.
* திரையில் எனக்கு பிடித்தமான ஜோடி என்றால் அது ஜெனிலியா தான்.
* 'ரெசிடண்ட் ஈவில்' தான் எனக்கு பிடித்த ஜோம்பி படம்.
* 'மிருதன்' என்று தலைப்பு வைக்கலாம் என்று கூறியது பாடலாசிரியர் மதன் கார்க்கி தான்.
* 'மிருதன்' படப்பிடிப்பில் ஜோம்பி மேக்கப் போட்ட நடிகர்களைப் பார்த்து சின்ன பயம் ஏற்பட்டது.
* எனக்கு அடுத்து அரவிந்த்சாமி தான் என் மனைவி ஆர்த்திக்கு பிடித்த நடிகர்.
* திரையுலகில் எனக்கு உத்வேகம் அளிப்பது என் அப்பா மோகன் மற்றும் கமல் சார்.
* எனது மகன்கள் இருவருமே 'மிருதன்' படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறார்கள்.
* படங்களின் வெற்றிக்கு நான் சரியான கதைகளைத் தேர்வு செய்கிறேனா அல்லது என்னுடைய அதிர்ஷ்டமா என்பது தெரியவில்லை.
* என்னுடைய அண்ணனுக்காக கதை எழுதி வருகிறேன். விரைவில் அவரை இயக்குவேன்.
* எனக்கு எதிராக மட்டுமே வில்லனாக நடிப்பேன்.
* குறும்படங்கள் தான் வித்தியாசமாக சிந்திக்க வைக்கிறது.