நடிகை ஷெரினுக்கு கரோனா தொற்று

நடிகை ஷெரினுக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

நடிகை ஷெரினுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய கணக்குப்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 32,937 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் இதுவரை நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 3,22,25,513 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகை ஷெரின் தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 3 - 4 நாட்களில் என்னைச் சந்தித்தவர்கள் விரைவாகத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷெரின் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in