8 ஆண்டுகளுக்குப் பிறகு நடிப்புக்குத் திரும்பிய கங்கை அமரன்

8 ஆண்டுகளுக்குப் பிறகு நடிப்புக்குத் திரும்பிய கங்கை அமரன்
Updated on
1 min read

சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடிப்புக்குத் திரும்பியுள்ளார் கங்கை அமரன்.

இசையமைப்பாளர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குநர் எனப் பல துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வந்தவர் கங்கை அமரன். தனது மகன் வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் பாடலாசிரியராகப் பணிபுரிந்து வந்தார். 'சென்னை 28' 2-ம் பாகத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார் கங்கை அமரன். ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துவரும் படத்தில் ஜோதிடராக கெளரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது ஒரு முக்கியமான திருப்புமுனைக் காட்சி என்கிறது படக்குழு.

தூத்துக்குடி, காரைக்குடி ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்துள்ள படப்பிடிப்பு தற்போது ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ப்ரியா பவானி சங்கர், ராதிகா, யோகி பாபு, ராஜேஷ், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் அருண் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in