ஹரி பட சூட்டிங்கில் அருண் விஜயக்குக் காயம்

ஹரி பட சூட்டிங்கில் அருண் விஜயக்குக் காயம்
Updated on
1 min read

ஹரி பட சூட்டிங்கில் நடிகர் அருண்விஜய்க்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

ஹரி இயக்கத்தில் அருண்விஜய் #AV33 என்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

இன்னும் பெயரிடப்படாமல் உள்ள இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட், ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்ட பலர் அருண் விஜய்யுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சக்திவேல், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், எடிட்டராக ஆண்டனி, கலை இயக்குநராக சக்தி வெங்கட் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் இரவு பகலாக நடித்து வருகிறது. நேற்று இரவு எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சியில் நடித்தபோது எதிர் பாராமல் திடீரென்று வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

லேசான காயத்துடன் தப்பியதால், தொடர்ந்து பகலில் நடைபெறும் காட்சிகளில் நடித்தார். ஆனாலும் வலி தாங்க முடியாமல் சிகிச்சை பெற்று வருகிறார். மீண்டும் நாளை மறுநாள் நடைபெறும் பரபரப்பான ஸ்டண்ட் காட்சிகளிலும் கலந்து கொண்டு நடிக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in