

'சவரக்கத்தி' படத்தைத் தொடர்ந்து 'அஞ்சாதே' படத்தின் 2ம் பாகத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.
2008ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அஞ்சாதே'. நரேன், பிரசன்னா, அஜ்மல், விஜயலட்சுமி நடிப்பில் வெளியான இப்படத்தை நேமிசந்த் ஜபக் தயாரித்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது தனது உதவியாளர் இயக்கும் 'சவரக்கத்தி' படத்தில் நடித்து, தயாரித்து வருகிறார் இயக்குநர் மிஷ்கின். அப்படத்தைத் தொடர்ந்து 'அஞ்சாதே 2' படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். நேமிசந்த் ஜபக் இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.
இப்படத்தில் நாயகனாக நடிக்க முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் நாயகன் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.