'அண்ணாத்த' அப்டேட்: அபிமன்யு சிங் ஒப்பந்தம்

'அண்ணாத்த' அப்டேட்: அபிமன்யு சிங் ஒப்பந்தம்

Published on

ரஜினி நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அபிமன்யு சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி அல்லாத முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். தற்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அபிமன்யு சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விஜய் நடித்த 'வேலாயுதம்', 'தலைவா' மற்றும் கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் அபிமன்யு சிங்.

அதனைத் தொடர்ந்து 'அண்ணாத்த' படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதிலும் வில்லனாகத் தான் நடித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கொல்கத்தா படப்பிடிப்பு உடன், ஒட்டுமொத்த 'அண்ணாத்த' படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகளை முடித்து, படத்தை வெளியீட்டுக்குத் தயார் செய்யவுள்ளார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in