

ப்ரியாங்கா சோப்ரா போலவே முதலில் தமிழில் அறிமுகமாகி விட்டு, பின்பு இந்தியில் அறிமுகமாக இருக்கிறார் தங்கை பார்பி ஹண்டா
மஜீத் இயக்கத்தில் விஜய் நடித்த படம் 'தமிழன்'. இப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ப்ரியங்கா சோப்ரா. இப்படத்திற்கு தமிழில் வேறு எந்தொரு படத்தினையும் ஒப்புக் கொள்ளவில்லை ப்ரியாங்கா சோப்ரா.
தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ப்ரியாங்கா சோப்ரா. தமிழ் இயக்குநர் அவரை தொடர்பு கொண்டாலும், அவர் இங்கு கவனம் செலுத்த விரும்பவில்லை.
இந்நிலையில், ப்ரியாங்கா சோப்ராவின் தங்கை பார்பி ஹண்டா தமிழில் அறிமுகமாகிறார். ஏற்கனவே இவர் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். தமிழில் 'நீயெல்லாம் நல்ல வருவடா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சம்மதம் தெரிவித்திருக்கிறார். இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்க, இயக்குநர் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் அறிமுகமாகி விட்டு அக்காவை போல இந்தியில் பெரிய நாயகியாக வலம் வர முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஹண்டா