நடிகரும், டப்பிங் கலைஞருமான காளிதாஸ் காலமானார்

நடிகரும், டப்பிங் கலைஞருமான காளிதாஸ் காலமானார்
Updated on
1 min read

நடிகர் மற்றும் டப்பிங் கலைஞருமான காளிதாஸ் காலமானார். அவருக்கு வயது 65.

நடிகர் மற்றும் டப்பிங் கலைஞராக வலம் வந்தவர் காளிதாஸ். வடிவேலு உடன் பல்வேறு காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். 'மர்ம தேசம்' தொடரில் வரும் இவருடைய குரல் மிகவும் பிரபலம். மேலும், பல்வேறு தொடர்களிலும் நடித்துள்ளார்.

1980-களில் வெளிவந்த பல படங்களின் வில்லன் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்தவர் காளிதாஸ். சுமார் 3000 படங்களுக்கும் மேலாக டப்பிங் பேசியுள்ளார். இறுதியாக 'கே.ஜி.எஃப் 2' படத்தில் ஒரு கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசியுள்ளார். அதே கதாபாத்திரத்துக்கு 'கே.ஜி.எஃப் 1' படத்துக்கும் காளிதாஸ் பேசியுள்ளார்.

சில மாதங்களாக காளிதாஸின் ரத்தத்தில் பிரச்சினை இருந்துள்ளது. அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது.

உடனடியாக அவருக்கு ரத்தத்தை மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறவே, அதுவும் மாற்றப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 12) காளிதாஸ் காலமானார். அவருடைய உடல் நாளை (ஆகஸ்ட் 13) தகனம் செய்யப்படவுள்ளது. இவருடைய மனைவி வசந்தா காலமாகிவிட்டார். இவருக்கு விஜய் மற்றும் பார்கவி என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் பார்கவி இணை இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in