விபத்தில் சிக்கியும் வலியுடன் நடித்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகர்

விபத்தில் சிக்கியும் வலியுடன் நடித்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகர்
Updated on
1 min read

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் நடித்துவரும் சரவண விக்ரமுக்கு ஏற்பட்ட விபத்து குறித்து அவரது தங்கை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழில் ஸ்டார் விஜய் சேனலில் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொடர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. சுஜிதா, ஸ்டாலின் முத்து, வெங்கட், ஹேமா, குமரன் தியாகராஜன் உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகின்றனர். 500 பகுதிகளுக்கும் மேல் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தமிழில் பெரும் வெற்றி பெற்ற தொடர்களில் ஒன்றாக இருக்கிறது.

ஏற்கெனவே இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, வங்காளம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் ரீமேக் செய்யப்பட்டு அந்தந்த மாநில நடிகர், நடிகையருடன், கதை மற்றும் கள அமைப்பில் சில மாறுதல்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் இத்தொடரில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரம் நடித்த முக்கியமான காட்சி ஒன்றைப் பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த அவரது தங்கை சூர்யா, சரவண விக்ரமுக்கு ஏற்பட்ட ஒரு விபத்து குறித்துப் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் திருமணக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது, படப்பிடிப்புக்கு வரும் வழியில் என் அண்ணனுக்கு விபத்து ஏற்பட்டது. ஆனால், உடல் முழுக்க வலியுடன் நான்கு மணி நேரத்தில் படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டார். அதன்பிறகு சில நாட்கள் அவரால் சரியாக நடக்கக்கூட இயலவில்லை. தன்னுடைய வலியை அவர் தன் சக குழுவினரிடம் காட்டிக் கொள்ளவில்லை. அவரது உறுதியையும் அர்ப்பணிப்பையும் கண்டபோது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in