நடன நிகழ்ச்சிக்கு நடுவராக மாறிய குஷ்பு

நடன நிகழ்ச்சிக்கு நடுவராக மாறிய குஷ்பு
Updated on
1 min read

கலர்ஸ் தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ‘டான்ஸ் vs டான்ஸ்’ சீசன் 2 நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு நடுவராகப் பங்கேற்கிறார்.

கலர்ஸ் தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சி ‘டான்ஸ் vs டான்ஸ்’. இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான ப்ரோமோ நேற்று வெளியானது. இந்நிகழ்ச்சியில் நடன இயக்குநர் பிருந்தா, குஷ்பு இருவரும் நடுவர்களாகப் பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து குஷ்பு கூறியுள்ளதாவது:

''நடனம் என்பது ஒரு கலை. அது என் இதயத்துக்கு மிக நெருக்கமான ஒன்று. எனக்கு அதில் மிகுந்த ஆர்வம் உண்டு. ‘டான்ஸ் vs டான்ஸ்’ முதல் சீசனை நான் பார்த்திருக்கிறேன். மிகவும் அற்புதமான நிகழ்ச்சி. தற்போது என்னோடு பிருந்தாவும் நடுவராகப் பங்கேற்பது கூடுதல் மகிழ்ச்சி. எனவே, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இரட்டிப்பு ஆவலோடு நான் காத்திருக்கிறேன்''.

இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in