

விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தில் தற்போது விஜய் - பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் விஜய்யுடன் செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ், லில்லிபுட் ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அங்கூர் அஜித் விகல் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது நடந்துவரும் படப்பிடிப்பு முடிந்த பிறகு, சென்னையில் உள்ள ‘கோகுலம் ஹவுஸ்’உள்ளிட்ட இடங்களில் புதிய அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடக்க உள்ளது. பிறகு, படத்தின் முக்கிய சண்டைக் காட்சியை ரஷ்யாவில் படமாக்க படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.