சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதி

சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதி
Updated on
1 min read

தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் ‘அழகிய கண்ணே’ திரைப்படத்தை, இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குநர் விஜயகுமார் இயக்கி வருகிறார். லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். முழு படப்பிடிப்பும் முடிந்துள்ள நிலையில், இப்படத்தில் விஜய்சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடித்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதற்கான படப்பிடிப்பை சில நாட்களுக்கு முன்புதான் அவர் முடித்துக் கொடுத்துள்ளார். விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்து ‘லாபம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. தற்போது பொன்ராம் இயக்கிவரும் படத்தில் அவர் நடித்து வருகிறார். ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் மற்றும் ‘மும்பைகார்’ வெப் சீரீஸ் படப்பிடிப்புகளுக்கும் தயாராகி வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in