

பிரபுதேவா நடித்துவரும் புதிய படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பிரபுதேவா நடிப்பில் ‘பொன்மாணிக்கவேல்’, ‘யங் மங் சங்’, ‘பஹிரா’, 'பொய்க்கால் குதிரை' உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன. இதில் சில படங்கள் வெளியீட்டுக்கும் தயாராகவுள்ளன. இந்தப் படத்தின் பணிகளைத் தொடர்ந்து தனது புதிய படத்தின் படப்பிடிப்பை இன்று (ஆகஸ்ட்6) தொடங்கியுள்ளார் பிரபுதேவா.
இந்தப் படத்தை 'குலேபகாவலி' இயக்குநர் கல்யாண் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். 'லட்சுமி' படத்துக்குப் பிறகு பிரபுதேவா - ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் படமாக இது அமைந்துள்ளது.
அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, ராமர் உள்ளிட்ட பல காமெடி நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இன்னும் இந்தப் படத்துக்கு பெயரிடப்படவில்லை.