இளம்பெண்களின் கனவுகளுக்கு ஊக்கமாக இருப்பீர்கள்: இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு குஷ்பு புகழாரம்

இளம்பெண்களின் கனவுகளுக்கு ஊக்கமாக இருப்பீர்கள்: இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு குஷ்பு புகழாரம்
Updated on
1 min read

இளம்பெண்களின் கனவுகளுக்கு ஊக்கமாக இருப்பீர்கள் என்று இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு குஷ்பு புகழாரம் சூட்டியுள்ளார்.

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய மகளிர் ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இன்று (ஆகஸ்ட் 6) இங்கிலாந்து அணியுடன் மோதியது. 3-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி கடுமையாகப் போராடியது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. இந்திய மகளிர் அணியின் ஆட்டத்துக்கு இந்தியப் பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக நடிகையும், பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"எந்தவொரு விளையாட்டிலும் வெற்றியும் தோல்வியும் ஒரு அங்கம். நீங்கள் எப்படி விளையாடினீர்கள் என்பதுதான் முக்கியம். நீங்கள் ஆத்மார்த்தமாக அர்ப்பணிப்புடன் சிறப்பாக ஆடினீர்கள். ஏராளமான இளம்பெண்கள் தங்கள் கனவுகளைப் பின்தொடர எப்போதும் ஊக்கமாக இருப்பீர்கள். உங்களை நினைத்துப் பெருமை கொள்கிறோம்"

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in