பாலாஜி சக்திவேலின் 'நான் நீ நாம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பாலாஜி சக்திவேலின் 'நான் நீ நாம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நான் நீ நாம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

'சாமுராய்', 'காதல்', 'கல்லூரி', 'வழக்கு எண் 18/9' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். தற்போது நடிகராகவும் 'வானம் கொட்டட்டும்', 'அசுரன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 'வழக்கு எண் 18/9' படத்துக்குப் பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான 'யார் இவர்கள்' இன்னும் வெளியாகவில்லை.

இதனிடையே, தனது அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் வீரா, சாந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 'நான் நீ நாம்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

ப்ளூமூன் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சுரேஷ் குமார், இசையமைப்பாளராக ஜாவித் ரியாஸ், எடிட்டராக தீபக் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in