இளையராஜா இசையில் கௌரி கிஷன் நடிக்கும் ‘உலகம்மை’

இளையராஜா இசையில் கௌரி கிஷன் நடிக்கும் ‘உலகம்மை’
Updated on
1 min read

விஜய் பிரகாஷ் இயக்கத்தில் கௌரி கிஷன் நடிக்கும் படத்துக்கு ‘உலகம்மை’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

‘காதல் எஃப்எம்’, ‘குச்சி ஐஸ்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் விஜய் பிரகாஷ் தற்போது ‘உலகம்மை’ என்ற ஒரு புதிய படத்தை இயக்குகிறார். எஸ்விஎம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக வி.மகேஷ்வரன் தயாரிக்கும் இப்படத்தில் கௌரி கிஷன் நாயகியாக நடிக்கவுள்ளார். அவருடன் வெற்றி மித்ரன், மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர், பிரனவ், அருள்மணி, காந்தராஜ், ஜெயந்திமாலா, அனிதா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

பிரபல எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்படும் ‘உலகம்மை’ படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கே.வி.மணி ஒளிப்பதிவு செய்ய, குபேந்திரம் வசனம் எழுதியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in