கவின் நடிக்கும் 'ஆகாஷ் வாணி' வெப் சீரிஸ்

கவின் நடிக்கும் 'ஆகாஷ் வாணி' வெப் சீரிஸ்
Updated on
1 min read

கவின் நடிப்பில் உருவாகும் வெப் சீரிஸுக்கு 'ஆகாஷ் வாணி' எனப் பெயரிடப்பட்டுப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

கவின் நடிப்பில் அடுத்ததாக 'லிஃப்ட்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் படம் வெளியாகும் என்று 'லிஃப்ட்' உரிமையைக் கைப்பற்றியுள்ள லிப்ரா நிறுவனம் அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்டர்' மற்றும் விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' ஆகியவற்றில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார் கவின்.

இந்நிலையில், தற்போது புதிதாக வெப் சீரிஸில் நடிக்கத் தொடங்கியுள்ளார் கவின். இதனை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஈநாக் இயக்கி வருகிறார். ரெபா ஜான் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் சரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கட் ராமன், மார்கரெட், மெல்வின், ஜான்சன், கவிதாலயா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வெப் சீரிஸ் தொடர்பாக ஈநாக், "இத்தொடர் காதலை, காதல் உறவின் பிரச்சினைகளைப் பற்றி உணர்வுபூர்வமாகக் கூறும் ஒரு அழகான திரைக்கதை. இது பார்வையாளர்களை எளிதில், உணர்வுபூர்வமாக ஈர்க்கும்படியான படைப்பாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

'ஆகாஷ் வாணி' வெப் சீரிஸின் கதையை ரமணகிரிவாசன் எழுதியுள்ளார். இதற்கு ஒளிப்பதிவாளராக சாந்தகுமார் சக்கரவர்த்தி, இசையமைப்பாளராக குணா பாலசுப்பிரமணியம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in