

'அண்ணாத்த' படத்தின் பணிகளை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார் ரஜினிகாந்த்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் நபராக ரஜினியின் காட்சிகள் அனைத்துக்கும் டப்பிங் முடிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரஜினி சம்பந்தப்பட்ட பணிகள் அனைத்துமே முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
விரைவில் மேற்கு வங்கத்தில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கவுள்ளது படக்குழு. இது முழுக்க வில்லன் வீடு சம்பந்தப்பட்ட காட்சிகளாகும்.
இதில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் இல்லை. ஒரு வேளை தேவைப்பட்டால் மட்டுமே ரஜினி பயணிப்பார் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
தற்போது சென்னையில் முழுமையாக ஓய்வெடுத்து வருகிறார் ரஜினி. விரைவில் அவர் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகக் கூடும்.