ட்விட்டர் கருத்து சர்ச்சை: நடிகர் சித்தார்த் விளக்கம்

ட்விட்டர் கருத்து சர்ச்சை: நடிகர் சித்தார்த் விளக்கம்
Updated on
1 min read

ட்விட்டரில் கூறியிருப்பது தன்னுடைய படத்தின் வசனம், யாரையும் குறிப்பிடவில்லை என்று நடிகர் சித்தார்த் தெரிவித்தார்.

சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் 'அரண்மனை 2' மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

மேலும், தீரஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்து, தயாரித்திருக்கும் 'ஜில் ஜங் ஜக்' திரைப்படம் பிப்ரவரி 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

முன்னதாக சில நாட்களுக்கு முன்பு ட்விட்டர் தளத்தில், "நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில இருக்கிற ஒரு தெருநாய்க்கு கிடைக்கும்னு எழுதியிருந்தா அதை யாராலும் மாற்ற முடியாது. #தமிழ் #தத்துவம்" என்று குறிப்பிட்டு இருந்தார் சித்தார்த். இக்கருத்தில் தனுஷின் ஹாலிவுட் வாய்ப்பைத் தான் குறிப்பிட்டார் என்று இணையத்தில் செய்திகள் வெளியாகின. சித்தார்த்தின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை சமூக வலைத்தளத்தில் உண்டாக்கியது.

ட்விட்டர் கருத்து குறித்து சித்தார்த்திடம் கேட்ட போது, "நான் நடித்த 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் வரும் வசனம் அது. நான் யாரையும் குறிப்பிட்டு அதனை வெளியிடவில்லை. எனது ட்விட்டர் பக்கத்தில் நான் நடித்த படத்தின் வசனத்தை எழுதினேன். மற்றவர்கள் வேறு விதத்தில் யூகித்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in