ஜூலை 29-ம் தேதி பாடலாசிரியர் சினேகனுக்குத் திருமணம்

ஜூலை 29-ம் தேதி பாடலாசிரியர் சினேகனுக்குத் திருமணம்
Updated on
1 min read

ஜூலை 29-ம் தேதி பாடலாசிரியர் சினேகனுக்குத் திருமணம் நடைபெறவுள்ளது.

தமிழ்த் திரையுலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். 700-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். இவருடைய பல பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றன. பாடலாசிரியராக மட்டுமன்றி நடிகர், அரசியல்வாதி எனப் பணிபுரிந்து வருகிறார்.

தொடர்ச்சியாகப் பல்வேறு தளங்களில் பணிபுரிந்து வந்ததால், திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். தற்போது அவருக்குத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர். ஜூலை 29-ம் தேதி கன்னிகா என்ற பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளார் சினேகன். இதனை சினேகன் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆனால், சினேகனுக்குத் திருமணம் நடைபெறவிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"கவிஞர் சினேகன் கட்சித் தலைமையகம் வந்து தனது திருமண அழைப்பிதழ் அளித்தார். மறைந்த எம்.என். மூலம் அறிமுகமானவர். இனிய நண்பர். வரும் ஜூலை 29 அன்று செல்வி கன்னிகாவுடன் இல்லறமேற்கும் அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்".

இவ்வாறு தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உள்ளார் சினேகன். நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியிலும், சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in