இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டிய 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா' தமிழ் ரீமேக்

இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டிய 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா' தமிழ் ரீமேக்
Updated on
1 min read

'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா' படத்தின் தமிழ் ரீமேக், இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ளது.

ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன், ஸ்ருதி ஷர்மா, ஸ்ரீதா ராஜகோபாலன், ராம்தத், விஸ்வநாத் உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா'. பல்வேறு முன்னணித் திரையுலக பிரபலங்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினார்கள்.

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், இதன் தமிழ் ரீமேக் தொடங்கப்பட்டுள்ளது. இதில் நாயகனாக சந்தானம் நடித்துள்ளார். மனோஜ் பீடா இயக்கியுள்ளார். சத்தமின்றி இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 80% முடிவு பெற்றுள்ளது. முழுமையாகப் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதில் சந்தானத்துடன் ஊர்வசி, விஜய் டிவி புகழ், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in