

'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் 'ஆண்டவன் கட்டளை' படத்தின் நாயகியாக நடிக்கவிருக்கிறார் ரித்திகா சிங்.
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் 'தர்மதுரை'. தமன்னா, சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்து வருகிறார். யுவன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'ஆண்டவன் கட்டளை' படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விஜய் சேதுபதி. இதன் படப்பிடிப்பு மார்ச் 7 முதல் தொடங்கவிருக்கிறது.
இப்படத்தின் நாயகியாக ரித்திகா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். 'இறுதிச்சுற்று' படத்துக்குப் பிறகு இப்படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் ரித்திகா என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படத்தின் எடிட்டராக 'கிருமி' இயக்குநர் அனுசரண் பணியாற்ற இருக்கிறார். இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.