

நாகார்ஜூனா, கார்த்தி நடித்திருக்கும் 'தோழா' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
வம்சி இயக்கத்தில் நாகார்ஜூனா, கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தோழா'. கோபி சுந்தர் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு விநோத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.வி.பி சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இணையத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இறுதிகட்ட பணிகள் முடிந்து இப்படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினார்கள். இப்படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கினார்கள்.
சென்சார் பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து இப்படத்தை மார்ச் இறுதியில் வெளியிட பி.வி.பி நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு சென்னையில் பிப்ரவரி 26ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.