அருள்நிதியின் 'டி ப்ளாக்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்நிதியின் 'டி ப்ளாக்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on
1 min read

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள 'டி ப்ளாக்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

'டைரி' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, இரண்டு படங்களைத் தொடங்கினார் அருள்நிதி. இதில் ஒரு படத்தை புதுமுக இயக்குநர் அரவிந்தும், மற்றொரு படத்தை விஜய் குமார் ராஜேந்திரனும் இயக்கி வந்தார்கள். இதில் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கியுள்ள படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று (ஜூலை 21) அருள்நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்தப் படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 'டி ப்ளாக்' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ள அரவிந்த் சிங், இந்தப் படத்தின் தயாரிப்பாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளராக ரோன், எடிட்டராக கணேஷ் சிவா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

யூடியூப் பக்கத்தில் மிகவும் பிரபலமான 'எரும சாணி' பக்கத்தை நடத்தி வந்தவர் விஜய் குமார் ராஜேந்திரன். தற்போது இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக மாறியிருக்கிறார். இதில் அருள்நிதிக்கு நாயகியாக அவந்திகா மிஸ்ரா நடித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in