ரஜினி ரசிகன் என்பதில் பெருமை: ஷாருக்கான் ருசிகரம்

ரஜினி ரசிகன் என்பதில் பெருமை: ஷாருக்கான் ருசிகரம்
Updated on
1 min read

ரஜினி ரசிகன் என கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்று 'FAN Anthem' பாடலை தமிழில் வெளியிட்டு, ஷாருக்கான் குறிப்பிட்டு இருக்கிறார்.

மனிஷ் சர்மா இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஃபேன்'. விஷால் - சேகர் இசையமைத்திருக்கும் இப்படத்தை யாஷ்ராஜ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜூலை 2014ல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ஆகஸ்ட் 2015ல் முடிவுற்றது.

இப்படத்தில் ஷாருக்கானின் மேக்கப் கலைஞராக க்ரேக் கணோம்(Greg Cannom) பணியாற்றி இருக்கிறார். இவர் மூன்று முறை ஆஸ்கர் விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 15ம் தேதி இப்படம் வெளியாகும் என்று யாஷ்ராஜ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும், இப்படத்தில் 'FAN Anthem' என்ற பெயரில் இடம்பெற்றிருக்கும் பாடல் ஒன்றை வெளியிட்டார்கள். ரசிகர் ஒருவர் தனது மனதுக்கு பிடித்த நடிகரை நினைத்து பாடுவது போல வடிவமைத்திருக்கிறார்கள்.

தற்போது இப்பாடல் பெங்காலி, போஜ்புரி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டு இருக்கிறது. 'FAN Anthem' தமிழ் பாடலை ஷாருக்கான் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிடும் போது நடிகர் ரஜினிகாந்தின் ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு, "நான் என்னை ஒரு நட்சத்திரமாக உணரவில்லை உங்களுடைய எண்ணிலடங்கா ரசிகர்களில் ஒருவனாகவே உணர்கிறேன். உங்கள் ரசிகன் என கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழில் வெளியாகி இருக்கும் 'Fan Anthem' பாடல்:

</p>

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in