சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்
Updated on
1 min read

சீனு ராமசாமி இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் 'இடம் பொருள் ஏவல்', 'மாமனிதன்' ஆகிய படங்கள் தயாராகவுள்ளன. இதில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படம் முதலில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்துக்காக கதைகள் எழுதி வந்தார் சீனு ராமசாமி. இதில் ஒரு கதையில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இதன் படப்பிடிப்புதான் முதலில் தொடங்கவுள்ளது. தற்போது ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கவுள்ளவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை முடித்துவிட்டுதான், தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் சீனு ராமசாமி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in