சசிகுமாரின் புதிய படம் தொடக்கம்

சசிகுமாரின் புதிய படம் தொடக்கம்
Updated on
1 min read

ஹேமந்த் குமார் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கவுள்ள புதிய படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

'ராஜவம்சம்', 'எம்ஜிஆர் மகன்', 'பகைவனுக்கு அருள்வாய்', 'கொம்பு வச்ச சிங்கம்டா', 'நா நா' உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சசிகுமார். இதில் பல படங்களின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன.

இந்தப் படங்களைத் தொடர்ந்து, சசிகுமார் நடிக்கவுள்ள புதிய படத்தின் பூஜை இன்று (ஜூலை 13) நடைபெற்றது. இதனைப் புதுமுக இயக்குநர் ஹேமந்த் குமார் இயக்கவுள்ளார். இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இன்று படத்தின் பூஜையுடன் பாடல் பதிவு ஆரம்பமானது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக கணேஷ் சந்திரா, எடிட்டராக சிவ நந்தீஸ்வரன், கலை இயக்குநராக மிலன், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக அன்பறிவ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

கிராமப் பின்னணியில் ஆக்‌ஷன் கலந்த கதையாக இந்தப் படம் உருவாகவுள்ளது. தற்போது சசிகுமாருடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்புக்குச் செல்லப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in