இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் விடுதலை

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் விடுதலை
Updated on
1 min read

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விடுதலை' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

'அசுரன்' படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'விடுதலை'. விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை வெற்றிமாறன் மற்றும் எல்ரெட் குமார் இணைந்து தயாரித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக இளையராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை சத்தியமங்கலம் காடுகளில் படமாக்கி முடித்துவிட்டது படக்குழு. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்துவருவதால் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த முறை செங்கல்பட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இத்துடன் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவு பெறுகிறது. அதற்குப் பிறகு இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு.

'விடுதலை' படத்தை முடித்துவிட்டு, சூர்யா நடிப்பில் உருவாகும் 'வாடிவாசல்' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் வெற்றிமாறன். இதனை தாணு தயாரிக்கவுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in