

வரிச்சலுகையை முன்வைத்து ’சாஹசம்’ என்னும் படத்தின் பெயரை ’சாகசம் என்னும் வீரச்செயல்’ என்று பெயர் மாற்றியிருக்கிறார்கள்.
அருண் ராஜ் வர்மா இயக்கத்தில் பிரசாந்த், அமாண்டா, நாசர், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'சாஹசம்'. பிராசந்த் அப்பா தியாகராஜன் தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. பிப்ரவரி 5ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்நி’8லையில் இப்படத்தின் பெயரை வரிச்சலுகைக்காக மாற்றி அமைத்த்திருக்கிறார்கள்.
’சாஹசம்’ என்ற வார்த்தையில் வடமொழி வார்த்தையான ’ஹ’விற்கு பதிலாக ’க’ போட்டிருக்கிறார்கள். மேலும், ’என்னும் வீரச்செயல்’ என்ற வார்த்தையும் இணைத்து ’சாகசம் என்னும் வீரச்செயல்’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தைத் தொடர்ந்து பிரபலமான இந்திப் படமான ’ஸ்பெஷல் 26’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் பிரசாந்த். இப்படத்தையும் தியாகராஜனே தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.