ஜூலை 12-ல் தொடங்கும் லிங்குசாமி - ராம் பொத்தினேனி படப்பிடிப்பு

ஜூலை 12-ல் தொடங்கும் லிங்குசாமி - ராம் பொத்தினேனி படப்பிடிப்பு
Updated on
1 min read

ஜூலை 12-ம் தேதி லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம்வரும் ராம் பொத்தினேனி நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்கவுள்ளார் லிங்குசாமி. இதன் நாயகியாக 'உப்பெனா' படத்தில் நடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்த கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் சமயத்தில் லிங்குசாமி - தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணி பாடல் பணிகளை முடித்துவிட்டார்கள். கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் படப்பிடிப்புக்கான அரங்குகள் அமைப்பது மற்றும் இடங்கள் தேர்வு ஆகியவற்றை முடித்துவிட்டது படக்குழு.

தற்போது ஜூலை 12-ம் தேதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in