விஷாலுக்கு வில்லனாக பாபுராஜ் ஒப்பந்தம்

விஷாலுக்கு வில்லனாக பாபுராஜ் ஒப்பந்தம்
Updated on
1 min read

விஷால் நடித்து வரும் புதிய படத்தின் வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் விஷால் நடித்து வரும் 'விஷால் 31' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கி வருகிறார். நாயகியாக டிம்பில் ஹயாத்தி நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டு பணிபுரிந்து வருகிறது.

இதில் யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். முதற்கட்ட படப்பிடிப்பை ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அரங்குகள் அமைத்துத் தொடங்கியது படக்குழு. தற்போது ஹைதராபாத்தில் வெளிப்புறங்களில் படமாக்க வேண்டிய காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள்.

இதில் விஷாலுக்கு வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அவருக்கும், விஷாலுக்குமான காட்சிகள் தான் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்துக்கு முன்னதாக 'ஜனா' மற்றும் 'ஸ்கெட்ச்' ஆகிய படங்களில் பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in