கிராமிய கலைஞர்களுடன் விஜய் சேதுபதி நடனம்: வைரலாகும் வீடியோ

கிராமிய கலைஞர்களுடன் விஜய் சேதுபதி நடனம்: வைரலாகும் வீடியோ
Updated on
1 min read

'மாஸ்டர் செஃப் தமிழ்’ நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில் கிராமியக் கலைஞர்களுடன் விஜய் சேதுபதி நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணிபுரியவுள்ளார் விஜய் சேதுபதி. இதற்கான ப்ரோமோவை வெளியிட்டு வருகிறது சன் டிவி. வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான 'மாஸ்டர் செஃப்' என்ற சமையல் நிகழ்ச்சி தற்போது சன் டிவி மூலம் இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளது.

'மாஸ்டர் செஃப் இந்தியா - தமிழ்' என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி தயாராகியுள்ளது. விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியின் ஒரு ப்ரோமோ நேற்று (ஜூன் 30) சன் டிவியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில் கிராமிய கலைஞர்களுடன் விஜய் சேதுபதி விஜய் சேதுபதி நடனம் ஆடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். ரசிகர்கள் பலரும் அதை தங்களது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in