

பிரபுதேவா நடிப்பில் ‘பொன்மாணிக்கவேல்’, ‘யங் மங் சங்’, ‘பஹிரா’ உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராகும் நிலையில் மீண்டும் ‘குலேபகாவலி’ கல்யாண் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். முழுக்க காமெடி கதையாக உருவாகும் இப்படத்தின் வேலைகள் விரைவில் தொடங்க உள்ளன.
‘குலேபகாவலி’ படம்போல இதிலும் நிறைய காமெடி நடிகர்கள் இடம்பெற உள்ளனர். இவ்வாறு தமிழில் அடுத்தடுத்து நடிக்க, 3 கதைகளை தேர்வு செய்து வைத்துள்ளார் பிரபுதேவா. இதற்கிடையே, இந்தியில் தான் இயக்க உள்ள அடுத்த படத்தின் வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.