

ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில்உருவாகும் ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிகட்டவேலைகள் நடந்து வருகின்றன. தனது பகுதியில்2 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே உள்ள நிலையில்,மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் ரஜினி. அவர் சென்னை திரும்பியதும்படப்பிடிப்பு, டப்பிங் உள்ளிட்ட பணிகளில் கவனம்செலுத்த உள்ளார்.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், எடிட்டிங் செய்யப்பட்ட படத்தை, சமீபத்தில் குடும்பத்தினருடன் பார்த்துள்ளார். படம் மிகவும் ரசிக்கும் வகையில் இருப்பதாககூறிய அவர், ஒரு இடத்தில் பாடல் சேர்க்கலாமா என இயக்குநர் சிவாவிடம் கூறியதாக தெரிகிறது. ரஜினி திரும்பியதும் அதற்கான பணிகளை மேற்கொள்ள படக்குழு தீர்மானித்துள்ளது.