‘தொரட்டி’ நடிகர் ஷமன் மித்ரு கரோனா தொற்றால் மரணம்

‘தொரட்டி’ நடிகர் ஷமன் மித்ரு கரோனா தொற்றால் மரணம்
Updated on
1 min read

‘தொரட்டி’ நடிகர் ஷமன் மித்ரு கரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 43.

கரோனா 2-வது அலை, இந்தியாவைக் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,208 ஆகக் குறைந்துள்ளது. 2,330 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் ‘தொரட்டி’ படத்தில் நடித்த ஷமன் மித்ரு இன்று (ஜூன் 17) கரோனா தொற்றால் உயிரிழந்தார்.

2019ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப் படம் ‘தொரட்டி’. பி.மாரிமுத்து இயக்கிய இப்படத்தில் ஷமன் மித்ரு, சத்யகலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வேத் சங்கர் இசையமைத்தார்.

சில நாட்களுக்கு முன்பு ஷமன் மித்ருவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி ஷமன் மித்ரு உயிரிழந்தார். அவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in