திவ்யா ஸ்ரீதர் விலகல்: ‘மகராசி’ தொடரில் இணைந்த ஸ்ரித்திகா

திவ்யா ஸ்ரீதர் விலகல்: ‘மகராசி’ தொடரில் இணைந்த ஸ்ரித்திகா
Updated on
1 min read

‘மகராசி’ தொடரில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரித்திகா ஒப்பந்தமாகியுள்ளார்.

2019ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'மகராசி'. 400 எபிசோட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இத்தொடரில் திவ்யா ஸ்ரீதர், ஸ்ரீரஞ்சனி, ரியாஸ் கான், விஜய், ராம்ஜி, மகாலட்சுமி, காயத்ரி யுவராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். முதல் 80 எபிசோட்களை எஸ்.பி.ராஜ்குமார் இயக்கி வந்தார். பின்னர் அவர் விலகிய நிலையில் தற்போது சுந்தரேஸ்வரன் இயக்கி வருகிறார்.

கரோனா இரண்டாவது அலையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ‘மகராசி’ தொடரின் ஷூட்டிங் தற்போது மீண்டும் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இத்தொடரிலிருந்து திவ்யா ஸ்ரீதர் விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. தற்போது அவருக்கு பதில் ‘நாதஸ்வரம்’, ‘கல்யாணப் பரிசு’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஸ்ரித்திகா ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தகவலை ஸ்ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் உறுதி செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in