

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரீஸில் நடித்துள்ள சமந்தாவின் கதாபாத்திரத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், வெப் சீரீஸ் நடிப்பில் அவர் தொடர்ந்து கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். சினிமாபோல வெப் சீரீஸிலும் சமந்தாவின் மார்க்கெட் தனித்து முத்திரை பதித்து வரும் நிலையில், அவரைத் தொடர்ந்து த்ரிஷா, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோரும் வெப் சீரீஸில் நடிக்கஅதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்காககவனம் ஈர்க்கும் கதைகளையும் கேட்டு வருகின்றனர். நல்ல வரவேற்பு, நல்ல சம்பளம் என்பதால் நடிகைகள் பலரும்தற்போது வெப் சீரீஸ் பக்கம் திரும்பி வருகின்றனர்.