சிம்பு, அனிருத் மீது வழக்கு: 30-ம் தேதி விசாரணை

சிம்பு, அனிருத் மீது வழக்கு: 30-ம் தேதி விசாரணை
Updated on
1 min read

பெண்களை இழிவு படுத்தும் வகையில் அமைந்த ‘பீப் பாடல்’ வெளியான விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

அனிருத் இசையில், சிம்பு பாடிய பீப் பாடல், ‘யூ டியூப்' மூலம் வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலின் வரிகள் பெண் களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, சிம்பு, அனிருத் ஆகியோர் மீது சென்னை, கோவை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, விருதுநகர் உட்பட தமிழகம் முழு வதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கோவையில் மாதர் சங்கத் தினர் கொடுத்த புகாரின்பேரில் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது ரேஸ் கோர்ஸ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்களை ஆபாச மாக சித்தரித்தல், இழிவுபடுத்து தல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. வரும் 18-ம் தேதிக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இருவருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் தி.நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டை முற்றுகையிட்டு கடந்த 3 நாட்களாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பல இடங் களில் இருவரின் உருவப்படங்களை தீயிட்டு கொளுத்தி போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சைதாப் பேட்டையில் உள்ள பெருநகர 9-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காசி என்பவர் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள் ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;

‘பெண்களை அவமானப்படுத் தும் விதமாக சிம்பு, அனிருத் பாடல் அமைந்துள்ளது. பெண்களை மதிக் கும் இந்த நாட்டில் மிக ஆபாச மான வார்த்தைகளால் பாட்டுப் பாடிய சிம்பு, இசை அமைத்த அனிருத் ஆகி யோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையை டிசம்பர் 30-ம் தேதி ஒத்திவைத்து பெருநகர 9-வது மாஜிஸ்திரேட் ஏ.பிலிப் நிகோலஸ் அலெக்ஸ் உத்தரவிட்டார்.

சம்மனுக்கு தடை மறுப்பு

போலீஸ் சம்மனுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையாவிடம், சிம்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் முத்துக் குமாரசாமி முறையிட்டார். ஆனால் தடைவிதிக்க மறுத்த நீதிபதி, விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in