Published : 06 Jun 2021 13:39 pm

Updated : 07 Jun 2021 09:52 am

 

Published : 06 Jun 2021 01:39 PM
Last Updated : 07 Jun 2021 09:52 AM

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம்

kiruthiga-udhaynidhi-announces-her-next-movie-with-kalidas-jeyaram

சென்னை

கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கவுள்ளார்.

மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான 'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த 'காளி' படத்தை இயக்கினார்.


அதற்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டன. தற்போது கிருத்திகா உதயநிதியின் அடுத்த படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக இந்தப் படத்தின் அறிவிப்பு ட்விட்டர் தளத்தில் உள்ள ஸ்பேசஸில் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் நாயகனாக காளிதாஸ் ஜெயராம், நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன் பணிபுரியவுள்ளார்.

இந்தப் படத்தினை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் மற்றும் சாகர் பென்டீலா ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர். கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், படப்பிடிப்பு தொடங்க படக்குழுவினர் ஆயத்தமாகி வருகின்றனர்.

தவறவிடாதீர்!

கிருத்திகா உதயநிதிகாளிதாஸ் ஜெயராம்கிருத்திகா உதயநிதியின் அடுத்த படம்வணக்கம் சென்னைகாளிதான்யா ரவிச்சந்திரன்One minute newsKiruthiga udhaynidhiKalidas jeyaramKalidasTanya ravichandran

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x