‘கல்யாணராமன்’, ‘கடல் மீன்கள்’ இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் மறைவு

‘கல்யாணராமன்’, ‘கடல் மீன்கள்’ இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் மறைவு
Updated on
1 min read

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார். அவருக்கு வயது 90.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மீண்டும் கோகிலா’, ‘கல்யாணராமன்’, ‘எல்லாம் இன்பமயம்', ‘கடல் மீன்கள்’, ‘மகராசன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். இது தவிர முத்து எங்கள் சொத்து, அடுத்தாத்து ஆல்பர்ட், மனக்கணக்கு, பல்லவி மீண்டும் பல்லவி உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 8.45 மணியளவில் வயது மூப்பு காரணமாக ஜி.என்.ரங்கராஜன் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜி.என்.ரங்கராஜன் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் ‘நினைத்தாலே இனிக்கும்’ (2009), ‘யுவன் யுவதி’, ‘ஹரிதாஸ்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஜி.ஆர்.குமரவேலனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in