இளையராஜாவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து

இளையராஜாவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து
Updated on
1 min read

இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் இளையராஜாவுக்கு கமல் தனது பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இன்று (ஜூன் 2) தனது 78-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பணிபுரிந்திருப்பதால், பல்வேறு முன்னணி நடிகர்கள் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், அவருடைய ரசிகர்களும் சமூக வலைதளத்தில் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். தற்போது இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கமல் ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இசைக்கு இளைஞர் இளையராஜா.என் மனதுக்குக் கிளைஞர். உணர்வுகளில் உறவாய் இருப்பவர். சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர். பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்"

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழில் 'விடுதலை', 'மாமனிதன்', 'க்ளாப்', 'மாயோன்', 'தமிழரசன்', 'அக்கா குருவி', 'துப்பறிவாளன் 2' உள்ளிட்ட படங்களில் இளையராஜா பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in